-
செய்திகள்
ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி ; மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு விளையாட்டுகள் நடத்த சில கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு, விலங்குகள் நல அமைப்பான PETA எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டபோது, தமிழகமே திரண்டெழுந்து, சாலைக்கு வந்து போராடியது. இதையடுத்து, சிறப்பு சட்டம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டதால், கடந்த 2017ம் ஆண்டு முதல், இந்நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது. அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையின்போது, ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு பிரிவினரும் கோரிக்கை…
Read More » -
காளை ரகங்கள்
உழவு வேலைக்கு உம்பளச்சேரி காளை
உழவுக்கு என்றே உறுதியான காளை இனம் ஒன்று உள்ளது. மற்ற காளைகளை விட இந்த காளைகள் அதிக உறுதியானவை. அந்த வகை காளையின் பெயர் உம்பள்சேரி. இதை பெயரை நம்மில் பலரும் கேள்விபட்டிருப்போம். அதன் வீரியம் குறித்தும் அறிந்திருப்போம். ஆனால் அதன் பூர்வீகம் பற்றிய முழு வரலாறு தெரிந்திருந்து கொள்வது மிக மக அவசியமாகும். வாங்க இந்த பதிவில் உழவு வேலைக்கு பயன்படுத்தப்பட்ட உம்பளச்சேரி காளை குறித்த வரலாற்றை தெரிந்து கொள்வோம். (umbalacheri) பிறப்பிடம், பெயர் காரணம்: உம்பளச்சேரி மாடு என்பது தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் காணப்படும் மாடுகளின் ஒரு இனமாகும். இவை குட்டையானவை என்றாலும். இதன் கால்கள் உறுதியானவை. ஆழமான சேற்றில்…
Read More » -
ஜல்லிக்கட்டு
களம் காணும் காளைகள் ஓர் பார்வை
இன்றைய தலைமுறைக்கு ஜல்லிக்கட்டு குறித்து தெரிந்திருக்கும் அளவிற்கு காளைகளின் வரலாற்றினை அறிந்து கொள்ள முயல்வதில்லை. ஜல்லிக்கட்டு என்பது ஒரு வீர விளையாட்டு என்றபோதிலும், அது விளையாட்டான விசயம் அல்ல. பழங்காலத்தில் காளைகளுக்கு கொடுக்கப்பட்ட மரியாதையாகும். அதன் வீரத்தை அறிந்து கொள்ள நடைபெற்ற விளையாட்டாகும். மனிதன் அறிவில் மட்டுமே பலமானவன் என்பதை தாண்டி, உடலிலும் பலம் மிக்கவன் என்பதை எடுத்துரைக்கும் விளையாட்டாகவே ஜல்லிக்கட்டு அமைந்தது. சரி, நாம் முதலில் ஏறுதழுவல், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு ஆகியவற்றை ஒதுக்கிவிட்டு, களம் காணும் காளைகள் குறித்து தெரிந்து கொள்வோம். (Tamil Jallikattu) காளைக்கு எருது என்ற பெயரும் உண்டு. எருதின் கழுத்திற்கும், முதுகிற்கும் நடுவில் உயர்ந்த மலை முகடுபோன்ற திமிலும், அதன்…
Read More » -
ஜல்லிக்கட்டு
ஏறுதழுவல் வரலாறு
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஐல்லிக்கட்டின் “சொர்க்க பூமியாக ” இன்னும் திகழ்ந்து வருகிறது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம்அவனியாபுரம் அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும்,திருச்சி பெரிய சூரியூர்,நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ,கூலமேடு , தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம்,புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை,வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை…
Read More »